நானே கேள்வி # நானே பதில் #

நானே கேள்வி #நானே பதில் #  சென்னைத்தமிழன் #

கேள்வி - இந்த உலகத்தை இயக்கி கொண்டிருக்கும் மந்திரம் என்ன?

சிவதி பதில் - இதிலென்ன சந்தேகம். இரண்டெழுத்து மந்திரம் "பசி"தான்.

நம்ப முடிய வில்லையா மு.சுயம்புலிங்கம் எழுதிய கவிதையை படியுங்கள்

கை இல்லாமல்
கால் இல்லாமல்
உறுப்புகள் கோரப்பட்டு
மனுசங்க இருக்காங்க
வயறு இல்லாத மனிதன்
இல்லவே இல்லை.....


எப்படி கவிதை. இப்ப ஒத்துக்கத்தானே வேணும் # சென்னைத்தமிழன் #

நானே கேள்வி # நானே பதில் #

நானே கேள்வி # நானே பதில் # சென்னைத்தமிழன் 

கேள்வி நமது அலுவலகத்தில் சத்துணவு திட்டப்பிரிவு உள்ளது. அதில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என பணி புரிகிறார்கள்.  அவர்களுக்கு விடுப்பு உண்டா?

சிவதி பதில் ஆம். ஒரு மாதத்திற்கு ஒரு நாள் வீதம்  ஆண்டிற்கு 12 தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.  அவர்களுக்கு ஒரு நிபந்தனை உண்டு.

 ஆனால் விடுப்பை அந்தந்த மாதமே துய்க்க வேண்டும். அந்த விதிமுறைகள் தற்போது தளர்த்தப்பட்டு (சத்துணவு ஊழியர்கள் சங்கம் போராடிய பிறகுதான்) ஆணை வெளியிடப்பட்டது.

 அதாவது ஒரு மாதம் எடுக்காமல் விட்ட விடுப்பை அடுத்த மாதம் சேர்த்து எடுத்து கொள்ளலாம். அத் தற்செயல் விடுப்பு இரண்டு நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். விடுப்பு எடுக்கும் நாளில் உணவு செய்முறை மற்றும் வழங்களில் யாதொரு குறைபாடுமின்றி மாற்று ஏற்பாடுகள் செய்துவிட்டு செல்ல வேண்டும்
(அரசு ஆணை. சத்துணவு திட்டத்துறை நிலை 166 நாள். 30.12.2009) # சென்னைத்தமிழன்#


நானே கேள்வி # நானே பதில் #

 நானே கேள்வி # நானே பதில் # சென்னைத்தமிழன்

கேள்வி – ஊராட்சி ஒன்றியம் / கிராம ஊராட்சி பொதுவான அங்காடிகளை ( Public Market) ஏற்படுத்த என்ன விதிமுறைகள் பின்பற்ற வேண்டும் ?

சிவதி பதில் –  ஊராட்சி ஒன்றியமோ அல்லது கிராம ஊராட்சியோ பொது அங்காடிகளை (Public Market ) உருவாக்க வேண்டுமென கருதினால் முதலில் மன்றத்தில் தீர்மாணம் இயற்ற வேண்டும். அதன் பின்னர் ஊராட்சி ஆய்வாளருக்கு (மாவட்ட ஆட்சியர்) இடம் எழுத்துப்பூர்வமான அனுமதி பெற்ற பின்னரே அங்காடியை திறக்க வேண்டும்.  அவ்வுத்திரவில் உரிமக்கட்டணம், எப்போது திறக்க வேண்டும் மூடவேண்டும்,

அங்காடியில் விற்கும் பொருட்களுக்கான கட்டணத்தை ஒன்றிய ஊராட்சி அவை மற்றும் கிராம ஊராட்சி அவை (நேர்வுக்கு ஏற்ப) நிர்ணயிக்க  மற்றும் கட்டுப்படுத்த அதிகாரம் உள்ளது.   த.நா.ஊ. சட்டம் விதி எண். 147 #  சென்னைத்தமிழன்

Newer Posts Older Posts Home
மண்ணை நேசிக்கும் மனிதனின் மனசாட்சி

என்னைப்பற்றி

நான் ஒரு வழிப்போக்கன், உங்களைப்போல எனக்கும் எதன் மீதும் கருத்து உண்டு. அதன் மீது உங்களுக்கும் விமர்சனம் இருக்கக்கூடும். இக்குளத்தில் கல்லெறியுங்கள். இனி இப்புவியில் நூறு பூக்கள் மலரட்டும்.

Followers

நூறு வார்த்தை பதிவு

காலச்சக்கரம் வேகமாய் சுழல்கிறது. நூறு வாரத்தைக்குமேல் படிக்க உங்களுக்கும் நேரமில்லாமல், எழுத எனக்கும் நேரமில்லாமல் - இடையே கிடைக்கும் சொற்ப காலத்தில் மனிதவாழ்வினை பற்றி பேசுவோம்.

Recent Comments