அடிப்படை விதிகள் வினா எண் 7
அடிப்படை விதிகள் வினா எண் 6
அடிப்படை விதிகள் வினா எண் 5
அடிப்படை விதிகள் வினா எண் 4
அடிப்படை விதிகள் கே 3
நானே கேள்வி # நானே பதில் # சிவதி அடிப்படை விதிகள் # வினா எண் 3
கேள்வி - அய்யா வணக்கம் நான் ஊராட்சி உதவியாளராக இருந்து பதவி உயர்வு பெற்று தற்போது இ.நி.உ. ஆக பணிபுரிந்து வருகிறேன். நான் ஊராட்சி ஊராட்சி செயலராக இருந்த போதே துறைத் தேர்வுகளில் மூன்று பாடங்கள் தேர்வடைந்துவிட்டேன். என்னுடைய பதவி உயர்வுக்கு நானிப்போது இதர தேர்வு மட்டும் எழுதினால் போதும்தானே?
பதில் - ஆமாம். ஒருவர் தகுதிகாண் பருவம் தொடங்குவதற்கு முன்பாக தேர்வில் தேர்ச்சி அடைந்தாலும் எடுத்துக் கொள்ளலாம் என விதிமுறை உள்ளது.
எனவே நீங்கள் ஊராட்சி செயலர் பதவியில் தேர்ச்சி அடைந்த பாடங்களை உரிய அடையாளச்சீட்டுடன் பணிப்பதிவேட்டில் அலுவலகத் தலைவரிடம் சான்று பெறுங்கள். நிகர உள்ள பாடங்களை தகுதிகாண் பருவத்திற்குள் தேர்ச்சி பெற முயற்சி செய்யுங்கள்.
ஏற்கனவே தேர்ச்சி அடைந்த பாடத்தினை மீண்டும் எழுத வேண்டிய அவசியம் இல்லை. ஆதாரம் Rule 15, Tamilnadu State and Subordinate Service Rules) # சிவதி TNRDOA, 7871336611
அடிப்படை விதிகள் கே2
நானே கேள்வி # நானே பதில் # சிவதி, அடிப்படை விதிகள் வினா எண் 2
கேள்வி - தகுதிகாண் பருவத்தில் விடுப்பு எடுக்கலாமா?
சிவதி பதில் - தற்செயல் விடுப்பு எடுத்தால் பிழையொன்றும் இல்லை. . தாராளமாக எடுக்கலாம் அது தவிர்த்த பிற விடுப்புகள் அனைத்தும் தகுதிகாண் பருவத்தில் எடுத்தால் உங்கள் தகுதிகாண் பருவம் தள்ளிப் போகும்.
அது மட்டுமல்ல அவ்விடுப்புகள் அரசு விடுமை நாளுடன் சேர்த்து எடுத்தால் அதுவும் கணக்கீடு செய்யப்பட்டு தகுதிகாண் பருவம் தள்ளிப்போகும் என்பதை உணர வேண்டும். இது உங்களோட அடிப்படை விதியிலேயே இருக்குங்க.. படிச்சுப்பாருங்க. தெரியும் # சிவதி TNRDOA, 7871336611
என்னைப்பற்றி
- சென்னைத்தமிழன்
- நான் ஒரு வழிப்போக்கன், உங்களைப்போல எனக்கும் எதன் மீதும் கருத்து உண்டு. அதன் மீது உங்களுக்கும் விமர்சனம் இருக்கக்கூடும். இக்குளத்தில் கல்லெறியுங்கள். இனி இப்புவியில் நூறு பூக்கள் மலரட்டும்.
Recent Comments