நண்பன் மகன் முகிலனுக்கு...

முகிலனுக்கு.....

நான்காவது படிக்கும் போது அப்பாவும் நானும்,

 சின்னத்தெரு மலையாளத்தான் கடையில் இடியுருண்டை வாங்கி சாப்பிடுவோம். 25 பைசா. 

அதுவே நானும் அவனும் சேர்ந்து காசு போட்டுத்தான் ஒரு இடியுருண்டை வாங்குவோம்.

 எங்களுக்கு எப்போதுமே 25 பைசா அளவுக்கு packet money கிடைத்ததில்லை 🙂


ஒரு உருண்டைய ரெண்டு பேரு உடச்சுதான் சாப்பிடனும் இல்லையா?

"எச்சையா பச்சையா?

வானாமா பூமியா?

அம்மாவா அப்பாவா? புதிர் போரட்டு எச்சில் கடி கடித்து, பாதி பாதி சாப்பிடுவோம்.


சாப்பிட்டுக்கொண்டே, 
அப்படி என்ன கதை பேசுவோம்னு என்று நினைவில் இல்லை.

 அந்த தென்னந்தோப்பு வாராவதி அருகே (மாணிக்கம் ஸ்டோர் பக்கத்துல இருக்கு) அமர்ந்து பேசாத கதைகள் இல்லை.

 'லாரி டிரைவர் ராஜாக்கண்ணு'ன்னு ஒரு படம்... அந்த படம் உங்கப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும். எப்போ பேசனாலும், அந்த படம் பற்றி பேசுவான்.


எங்க அப்பாவோ, இல்ல உங்க தாத்தாவோ அந்த வழியே வந்தால்

 "டேய், இந்த நேரத்துல என்னடா பணறீங்க, என்ற சிறு அதட்டலில் அங்கி்ருந்து கலைவோம்...

மறுநாள் மீண்டும், அதே வாராவதி... 
தீராத கதைகளை பேசி பேசி தீர்த்தோம்.

இன்று
வாராவதி வற்றிவிட்டது... எங்கள் நட்பு வற்றாத ஜீவ நதியாக அணைகளை உடைத்து பெருக்கெடுத்து ஓடுகிறது..  

எங்களுக்குள்ளும் சண்டை வரும், ஆனால் அரை மணி நேரம் கூட நீடித்ததில்லை.


ஒரு முறை
செய்யாத தப்புக்கு ஒரு குடிகாரன் என்னை அடிக்க, அந்த குடிகாரனை தட்டிக்கேட்டு உங்கப்பா அடிவாங்கின கதையெல்லாம் கைவசம் இருக்கு (அப்போ, ஒன்பதாவது படிக்கிறோம் 1988)

முகி.. எங்களைப்போல  நல்ல நட்பைதேடிக்கொள்.... காலம் முழுவதும் அது உன்னை காக்கும்... பிறகு உலகில் யாருக்கும் பயப்படத்தேவையில்லை... # சென்னைத்தமிழன்

posted under | 0 Comments
Newer Posts Older Posts Home
மண்ணை நேசிக்கும் மனிதனின் மனசாட்சி

என்னைப்பற்றி

நான் ஒரு வழிப்போக்கன், உங்களைப்போல எனக்கும் எதன் மீதும் கருத்து உண்டு. அதன் மீது உங்களுக்கும் விமர்சனம் இருக்கக்கூடும். இக்குளத்தில் கல்லெறியுங்கள். இனி இப்புவியில் நூறு பூக்கள் மலரட்டும்.

Followers

நூறு வார்த்தை பதிவு

காலச்சக்கரம் வேகமாய் சுழல்கிறது. நூறு வாரத்தைக்குமேல் படிக்க உங்களுக்கும் நேரமில்லாமல், எழுத எனக்கும் நேரமில்லாமல் - இடையே கிடைக்கும் சொற்ப காலத்தில் மனிதவாழ்வினை பற்றி பேசுவோம்.

Recent Comments