முட்ட பிரியாணி அரசியல்
undefined
undefined
நம் அரசியல் விசித்திரமானது...
நம் விவசாயி முப்போகமும் விளைவித்து உலகிற்கு அளிக்கிறான்
ஆனால்...
இலவச அரிசிக்கு ரேஷன் வரிசையில் நிற்கிறான்.
இந்திய வேர்ஹவுஸ் கோடவுனில் மக்கிப்போன மனிதர்களின் உணவை எலி சாப்பிடும்...
பஞ்சம் பட்டினியின் போது காவிரி டெல்டா விவசாயி எலியை சாப்பிடுவான்...
குஷ்புவுக்கு பதில் சிம்ரன்
வடிவேலுவுக்கு பதில் சிங்கமுத்து
தியகுவுக்கு பதில் செந்தில்
மெட்ரோ ரயிலுக்கு பதில் மோனோ ரயில்
கலைஞர் வீடு திட்டத்திற்கு பதில் பசுமை வீடு
டீவிக்கு பதில் மிக்சி
மஞ்சள் துண்டுக்கு பதில் பச்சை புடவை
இவன் கஞ்சித்தொட்டி திறப்பான்
அவன் முட்டை பிரியாணி போடுவான்
இருவருமாக சேர்ந்து செய்வது எதாவது உண்டா?
டாஸ்மாக் தண்ணியில தமிழனை மிதக்கவிடுவது
கடல் தண்ணியில செத்துப்போன இராமேஸ்வரம் மீனவன் சமாதிக்கு பூ போடுவது.
அது தவிர இவனுங்க ஏதாவது ஒன்னா செய்வாங்களா?
ஆம் ஒன்னே ஒன்னு இருக்குதே
அது
அண்ணா சமாதிக்கு சுண்ணாம்பு அடிப்பது
போங்கடா நீங்களும் உங்க ஜனநாயகமும்
- சென்னைத்தமிழன்
1 comments:
very nice thinking and compilation
Post a Comment