கோதாரி நினைவுகள் – 3
கோதாரி நினைவுகள் – 3
முட்டி மோதி ஜெயிப்பதற்கு சந்திரசேகருக்கும் எனக்கும் ஜல்லிக்கட்டு போட்டியா நடக்கிறது.
ஆனால் என்னைவிட அதிகமான மதிப்பெண்களை சந்திரசேகர் பெற்றிருந்தான்.
பல நம்பிக்கையோடு திருநீரும் பொட்டுமாக சந்திர சேகர் வந்திருந்தான். அவனுக்கு MTMR படிப்பு உறுதியானது.
அடுத்தது…
எங்கள்முறை. ..
பௌன்டரி பற்றி பாலசுப்பிரமணி சார் ஆகா.. ஓகோ.. வென பேசிய பேச்சிகளின் மூலம் அப்பா கொஞ்சம் இறங்கிவந்தார்.
மெட்டல் சயின்ஸ், மெட்டிரியல் சயின்ஸ், டை காஸ்டிங்க்.. பௌன்டரி படிச்சவன் ஒருத்தன் கூட வேலையில்லாம வீட்ல இல்ல.. கைநிறைய சம்பாதிக்கிறாங்க தெரியுமா சார்… என ஏதேதோ சொல்ல.. சொல்ல.. உருகினார் அப்பா.
‘ கைகளில் இருந்த சேமிப்பு 10 ஆயிரம் பணத்திற்கு அந்த படிப்பே என எமக்கு எழுதியும் வைத்திருந்தது.
அப்பா பணிபுரிந்த ஊரக வளர்ச்சித்துறை மூலம் அங்கே certificate கோர்சும் நடைபெற்று வந்ததால், அவரது அரசுத்துறைக்கும் கோத்தாரி கல்விநிலையத்திற்கும் இருந்த இணைப்பு மூலம் எப்படியோ எனக்கான பட்டயப் படிப்பின் சேர்க்கை உறுதி செய்யப் பட்டது.
அன்று மாலை…
மாலை நண்பர்கள் கூட்டத்தில் பேசும் போது சொன்னேன். ”டேய் பௌன்டரி டெக்னாலஜி சேரப்போறேன்டா”
டே.. அப்படின்னா என்னடா..
”டேய் அது ஃபௌண்டேஷன் டா..
சிவில் கோர்சுல அடித்தளம் அமைக்கிறது பத்தி தனியான கோர்ஸ் போல..” என்றான்
மற்றொரு நண்பன்
அதை மறுத்து அவனது அண்ணன் ஒருவன் சொன்னான்..
பௌண்டரின்னா பண்ணைன்னு அர்த்தம். ஆடு, மாடு, கோழி, பன்றி வளர்க்கிற இடத்தைத்தான் ஃபௌன்டரின்னு சொல்லுவாங்க.
அனேகமா அத பத்திதான் படிக்கிறது. என்றான் விவரமாக…
என்னவென்று தெரியாத ஒரு படிப்பை படிப்பதா? என்ற கவலை மிகுதியாக இருந்தது.
ஆனால் எப்போதும் தனித்து நிற்க வேண்டும் என்ற எண்ணம் அப்போதும் என்னுள்ளே இருந்தது. யாரும் படிக்காத படிப்பை நாம் படிக்க வேண்டும் என்ற மேதமையும் இருந்தது.
சுகுமாரன் தமது கவிதைகளில் சொல்லுவார்
”தன்னார்வ சமூகத்தில்
தனித்துவம் காட்ட
காண்டா மிருக கொம்பு காட்டு”
நானும் காண்டாமிருக கொண்பு காட்ட முனைந்தேன்.
சிறப்பான ஒரு படிப்பை படிக்கப்போவதாக உறவினருக்கெல்லாம் கடிதம் போட்டேன். உடன் +2 படித்த நண்பர் மத்தியிலெல்லாம் காலரை இழுத்துவிட்டு டம்பம் காட்டினேன். பெயருக்கு பின்பாக D.F.Tech., இருக்கப்போவதை நினைத்து நினைத்து புலங்காகிதம் அடைந்தேன்.
சாதாரண டிப்ளமாவுக்கு இவ்வளவு பில்டப்பா?
ஆமாம்..
ஆம்ஸ்டாங்குக்கும் அப்துல் கலாமுக்கு மட்டுமா கனவு சொந்தம்…
அமிர்தராஜூவுக்கும் ஆர்.எம் அருணுக்கும் தினகரனுக்கும் கூட கனவின் எஜமானர்கள்தானே..
”ஆசைகள் இங்கே குதிரைகள் ஆனால் ஏழைகள் கூட ஊர்வலம் போவார் ”
பெங்களூர் நெடுஞ்சாலையின் ஓரம் இருந்து கல்வி நிலையத்திலிருந்து என் கனவு ஓரிரு வாரத்தில் தொடர்ப்போகிறது...
என்னைப்போலவே கனவின் எஜமானர்கள் ஒன்று கூடினார்கள். கல்லூரி முதல்நாள் வகுப்பை யார்தான் மறக்க முடியும்?...
அப்படி என்னதான் நடந்தது..
காத்திருங்கள்... # சிவ. தினகரன் CMKTI

0 comments:
Post a Comment