ஈரத்துணி

நிலத்துல மனுசன் மாட்டை வச்சி உழுதான்.

கதிர் விளைஞ்சது.

மேல இருக்கிற நெல் மனுசனுக்கு உணவு,

நடுவுல இருக்குற வைக்கோல் மாட்டுக்கு,

கீழே இருக்கிற கரம்பு நிலத்திற்கு உணவு.

தோட்டம், துரவு, மனிதன், மாடு எல்லாம் சுகபோகமாதான் இருந்தாங்க....

பாழப்போன தாராளமயம் வந்தாலும் வந்தது எல்லார் வயித்திலேயும் ஈரத்துணி கட்டிக்க சொல்றாங்க..

மலட்டுதன்மை உள்ள பி.டி. காய்கறி,

சத்தில்லாத சக்கை பயறு உணவு....

வைக்கோல் (தண்டு) இல்லாத குட்டை பயிர்....

நவீன விவசாயத்துல பூச்சி மருந்தால் விஷமாகிப்போன நிலம்....

ஓரே ஒப்பந்தத்தில் மனிதன், மாடு, நிலம் எல்லா வயித்திலேயும் அடிகிறதுக்கு பேருதான் புதிய பொருளாதார கொள்ளை, (மன்னிக்கனும்) கொள்கை.

டிராக்டர் வாங்க 12% கடன் வட்டி......

கார் வாங்கனும்னா... ஐடி பான் கார்டு இல்லன்னா பேங்க் ஸ்டேட் மென்ட் போதும். 7%க்கும் குறைவான வட்டி.

மத்திய அரசு சொல்லுது

உழைத்தால் உயரலாம்

ஆனா யார் உழைத்தால்,

யார் உயரலாம்னு மட்டும் சொல்லமாட்டீங்க.
- சென்னைத்தமிழன்


Newer Posts Older Posts Home
மண்ணை நேசிக்கும் மனிதனின் மனசாட்சி

என்னைப்பற்றி

நான் ஒரு வழிப்போக்கன், உங்களைப்போல எனக்கும் எதன் மீதும் கருத்து உண்டு. அதன் மீது உங்களுக்கும் விமர்சனம் இருக்கக்கூடும். இக்குளத்தில் கல்லெறியுங்கள். இனி இப்புவியில் நூறு பூக்கள் மலரட்டும்.

Followers

நூறு வார்த்தை பதிவு

காலச்சக்கரம் வேகமாய் சுழல்கிறது. நூறு வாரத்தைக்குமேல் படிக்க உங்களுக்கும் நேரமில்லாமல், எழுத எனக்கும் நேரமில்லாமல் - இடையே கிடைக்கும் சொற்ப காலத்தில் மனிதவாழ்வினை பற்றி பேசுவோம்.

Recent Comments