அடக்கமாட்டாமல் அவமானப்படு.
அன்னைக்கி வ.ஊ.சி யும், சுப்பிரமணிய சிவாவும் வெளிநாட்டு துணியெல்லாம் போட்டு தீயில கொளுத்துனாங்க. அப்போ இந்த காங்கிரஸ் காரங்க கைதட்ட சொன்னாங்க...... எங்க தாத்தாவெல்லாம் கைத்தட்டுனாரு...
இப்ப நோக்கியா கம்பெனியும், சோனி கம்பெனியும் இந்தியாவுக்கு கொண்டு வந்துட்டோம்னு கைதட்ட சொல்றாங்க..... நானும் கூட சேர்ந்து கைதட்டினேன். கைதட்டி, கைதட்டி தனரேகை, ஆயுள் ரேகையெல்லாம் தேஞ்சி போய், மண்ட கொழம்பிப்போய் எவன் செத்தா எனக்கென்னனு தமிழக எம்.பி. மாதிரி வாய மூடிகிட்டு உட்காந்து கிட்டேன்.
என்னங்க பன்றது.... வாய மூடிக்கினு உட்காரது, இன்னைக்கி நேத்து பழக்கம் இல்லீங்கோ.. ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கூடத்தில இருந்தே இந்த வாத்தியாருங்க ‘ச்சு... வாய மூடு!’ ‘ச்சு ... வாயமூடுன்னு’ சொல்லி, சொல்லி ‘சு’ ஆரம்பிக்கிற சுதந்திரம், சுகாதாரம் எல்லாத்துக்கும் அர்த்தம் புரியாம சும்மா உட்காந்து பாதி பொழுது போனதுதான் மிச்சம்.
சரி மேட்டருக்கு வருவோம்...
அரிசின்னு அள்ளிப்பார்ப்பாரும் இல்லாமல்,
உமின்னு ஊதிபார்ப்பாரும் இல்லாமல் பல திட்டம் இந்தியாவுல இருக்குது. அதுல ஒன்னு சுகாதார திட்டம்.
சிறுநீர் போறதுக்கு நெ.1. யார் சொன்னானு தெரியுல, அவருக்கு மானசீகமாக கையெடுத்து கும்பிடலாம். நம்நாட்டில் தலைவிரிச்சாடும் நெ.1 பிரச்சினை கழிப்பிடம்தான். நமக்கும் வெளி நாட்டுக்கும் சுகாதாரத்தில் அதிக வித்தியாசம்.
ஓன்னு..
மேலை நாட்டுல மழைபெய்தால் சாலையில உள்ள மழை தண்ணி கால்வாயில் போகும்,
நம்ம ஊரில் மழை வந்தா சாக்கடை கால்வாயில் உள்ள தண்ணி ரோடுல போகும்.
அடுத்ததா...
வெளிநாடுகளில் கழிப்பிடதுக்கு போய் சிறுநீர் கழித்தால் இலவசம்,
வெளியிடத்தில் சிறுநீர் கழித்தால் அபராதம்.
நம்ம ஊரில் பொது இடத்தில் சிறுநீர் போனா இலவசம்,
கழிப்பிடத்திற்கு போனால் கட்டணம்.
இந்த வித்தியாசம்லா இருக்க கூடாதுன்னு நாமலுந்தான் கங்கனம் கட்டிக்குனு நாம்மால முடிஞ்சது நண்பர்கள் தினம், காதலர் தினம், கள்ள காதலர் தினம், வெப்பாட்டி தினம்னு கொண்டாடி பாக்குறோம் ஆனா இந்த வெள்ளக்காரனுங்க நம்மல கிட்டயே சேக்க மாட்டன்னுறானுங்க... ஆஸ்ரேலியாவில இருந்து அமெரிக்கா வரைக்கும் ஒரு வெறியாத்தான்யா அலையரானுங்க.... (சீக்கிரம் சிஎம் கிட்ட சொல்லி ஒபாமாவுக்கு ஒரு கடுதாசி எழுதச் சொல்லனும்)
1954-ல் முதல் ஐந்தாண்டு திட்டத்தில் கொண்டு வரபட்ட மிக முக்கிய திட்டமான சுகாதார திட்டம். இன்னும் முக்கி, முக்கி கரை சேர்ந்தபாடா தெரியல. 7வது ஐந்தாண்டு திட்டம் வரைக்கும் 20% குடும்பத்துக்கு கழிப்பிடம் கட்டித்தரனும்னு சபதம் கூட எடுத்துட்டோம் ஆனா ஒன்னும நடக்க மாட்டேங்குது அண்ணாச்சி...
உலக சுகாதார நிறுவனம் கூட எவ்வளவோ சொல்லிபாத்துடிச்சி... ‘’டேய் பசங்களா நீங்க செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் ஏழு ரூபாய மிச்சப்படுத்தும்னு’’ ஆனா நம்ம பயபுள்ளைங்க
இராணுவத்துக்கு கோடி, கோடியா கொட்டி அனு, ஆயுதம் பொக்ரான்னு வெடிச்சி பாக்குராங்களே தவிர, இந்த முக்கிய பிரச்சிணைய மறந்துடராங்க...
இந்த வருஷம் கூட, நம்ம நாட்டுல கல்வி, மருத்துவம், விவசாயம், சுகாதாரம் இதெல்லாம் விட்டுபோட்டு இராணுவத்துக்கு ஒன்றலட்சம் கோடி ஒதுக்கி இருக்காரு நிதியமச்சர்.
அதுனால நம்மாளுங்க கருக்கல்ல தெருவோரமா ‘முக்கி’க்கின்னு இருக்குறாங்க...
சுகாதார சீர்கேட்டால ஒரு நாளைக்கி உலகம் முழுக்க 4900 பேரு மண்டய போடுறதா உலக சுகாதார நிறுவன்ம தகவல் சொல்லுது. அதில்லாம சர்வதேச அளவுல சுகாதார கேட்டுல முதல் இடம் இந்தியாவுக்கு தான். ஆமாங்க.... இந்தியாவுல கழிப்பிடம் இல்லாம திறந்த வெளியில சிறுநீர், மலம் கழிக்கறவங்க மட்டும் 66 கோடி பேர். ஆமாங்க பல ஊர்ல நம்ம சகோதரிங்க மான்னத்த வேலிகாத்தான் தான் ‘மானம் காத்தானாக’ மாறி கடமைய செய்யுது சாமி.
இந்த ஜனநாயக காவலருங்க கிட்ட கேக்குறதெல்லாம் இதுதாங்க....
- டீவி கொடுக்கறேன், கேஸ் அடுப்பு கொடுக்கறேன், ரெண்டு ஏக்கர் நிலம் கொடுக்கறேன்னு டபாய்கரதவிட
எல்லா வீட்டுக்கும் சுகாதாரமான கழிவறை கட்டித்தரம்னு தேர்தல் வாக்குறுதி கொடுங்க அப்பு....
- பொதுக் கழிப்பிடத்துல தண்ணிவசதி இருக்கான்னு, எட்டி பாத்துட்டு ஓன்னுக்கு, ரெண்டுக்கு பிரச்சணை தீத்துட்டு மூனுக்கு (Moon) போயி தண்ணியிருக்கான்னு பாருங்க.
- காலரா, டயேரியா, மலேரியா, சிக்குன் குன்யான்னு மனுசன் அனு, அனுவா சாவறதுக்கு பதில் சொல்லிட்டு அனு, ஆயுத ஒப்பந்தத்துல கையெழுத்து போடுங்கடா சாமி......
- அறிவியில் வஞ்ஞானிங்க எஸ்.எல்.வி 4, பிரம்மோஸ், தர்பூஸ்ன்னு... புஸ்..புஸ்ன்னு... கடல்ல விழறதுக்கு ஏவுகணை விடரத்துக்கு பதில்.. உறுப்படியா மனித மலக்கழிவை மனிதனே அல்லாமல் தடுக்க... அறிவியல் சாதனத்தை விரைவா கண்டுபிடிங்கப்பா...
- ‘சொகுசுப்பேருந்து’ விட்டு காச புடுங்கறதுக்கு முன்னாடி, பஸ்டான்டுக்கு, பஸ்டான்ட் ‘கக்கூஸ் போதுமானதா’ இருக்குதான்னு பாருங்கப்பா.... சிதிலமடைஞ்சி போகும் பொது கக்கூசுக்கு கதவ போட்டுட்டு அப்புறமா உங்க பஸ்ஸுக்கு ‘தானா’ சாத்திக்கிற கதவ போடுங்கப்பா...
இல்லைன்னா மேல உள்ள போட்டோவத்தான் ‘வாழும் வரலாரே’ ன்னு எல்லா ரோடுலையும் 'கட்அவுட்' வெக்க வேண்டி வரும்..
25 comments:
me first
நல்லாருக்கு , இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் , தொடருங்கள்
மங்குனி அமைச்சர் வருகைக்கு நன்றி.... வாழ்த்துகள்
முத பதிவே சூப்பர்,அப்புறம் இந்த மங்கு கூட ரொம்ப டச் வச்சுக்கவேண்டாம் பய புள்ள விவகராமான ஆளு என்ன பட்டு நான் சொல்லுறது சரி தானே
ஆகா.. சூப்பரா பின்றீங்க..
அடிச்சு ஆடுங்க அப்பு..
அப்படியே..இந்த Word Verfication-ன எடுத்து விடுங்க..கண்ணக் கட்டுது..
என்னய்யா இது,ஆரம்பமே அதகளமா இல்ல இருக்கு..........
ரைட்,நடத்துங்க.....
முதல் பதிவே அற்புதமாக உள்ளது, வாழ்த்துக்கள்!
No-1, பதிவு.
எக்ஸ்பிரஸ் பத்திரிகையில
இன்னைக்கு இதுபத்தி ஒரு
பத்தி வந்திருக்கு. இந்தியாவுல,
பாதிக்கு பாதி மொபைல் போன்
வச்சிருக்காங்காக! ஆனால்
கழிப்பிட வசதியத்தான் காணோமுன்னு.
ஒன்னு, ரெண்டுன்னு வருசையா
எழுதுங்க.
வெளிநாடுகளில் கழிப்பிடதுக்கு போய் சிறுநீர் கழித்தால் இலவசம்,
வெளியிடத்தில் சிறுநீர் கழித்தால் அபராதம்.
நம்ம ஊரில் பொது இடத்தில் சிறுநீர் போனா இலவசம்,
கழிப்பிடத்திற்கு போனால் கட்டணம்.//
நெத்தியடியாவும் எகத்தளமாகவும் எழுதி இருக்கிங்க... வாழ்த்துக்கள்...
வந்தேன் .. வாசித்தேன்.. மகிழ்ந்தேன். நன்றி நண்பரே. நம்ம அங்காடி தெரு படத்துல ஒரு மேட்டர் வருமே. பெரும்பாலான கட்டன கழிபறைகளின் கதை அதுவாகவே இருக்குமோ. நீங்க நல்லாத்தான் சொல்லீருக்கீங்க. கேக்கறவங்க கேட்டு பண்ணவேண்டியத பண்ணாங்கனா நல்லாத்தான் இருக்கும். மொத்ததுல நம்ம மனுஷங்களுக்கு தண்ணில கண்டம்னு வெச்சுக்க வேண்டியதுதான்.
பொதுக் கழிப்பிடத்துல தண்ணிவசதி இருக்கான்னு, எட்டி பாத்துட்டு ஓன்னுக்கு, ரெண்டுக்க பிரச்சணை தீத்துட்டு மூனுக்கு (Moon) போயி தண்ணியிருக்கான்னு பாருங்க.//
உங்களுடைய முதல்பதிவா...ஆச்சரியாமாக இருக்கு. அருமை நண்பரே...தொடருங்கள். வாழ்க வளமுடன்,வேலன்.
சாட்டையடி!!!
கலக்கல் அண்ணாத்தே,
தமிழிஷில் submit பண்ணுங்க, நிறைய பேரை
சென்றடையும் உங்கள் படைப்புகள்,
வாழ்த்துக்கள்.
புதுசா எழுதறேன்னு எல்லாம் கதை விடாதீங்க!!...:) எழுத்து நடை நல்லா இருக்கு, சொன்ன கருத்தும் சூப்பர்...:) வாழ்த்துக்கள்.
:-)
நீங்க சொல்றது சரிதான்...ஆனா யாரு கேக்கா!
//நம்ம ஊரில் பொது இடத்தில் சிறுநீர் போனா இலவசம்,
கழிப்பிடத்திற்கு போனால் கட்டணம்.//
என்ன கொடும பாருங்க...
ஆரம்பமே அசத்தலுங்க...தொடருங்கள்...
dear sir,
It is so nice. may i know why your are blamming foreign company and congress, because off foreign company our people earning more money.but your article is good keep it up all the besttttttttttttttttt.
நன்றாக சொன்னாய் நண்பா,
இது வரை பிச்சைகாரத்தானமாக தேவையைவிட குறைவாகவே யுனிட்காஸ்ட் நிர்ணயம் செய்து இதுவரை செயல்படுத்திய தனிநபர் சுகாதார திட்டங்களை வெற்றிகரமாக தோற்கடித்த மேதாவி நிபுணர்கள் படிக்கவேண்டும் உமது இடுகையை. தொடர்ந்த முழங்கட்டும் உமது பேரிக்கை.நாளையாவது விழிக்கட்டும் நமது தேசம்.
முதல் பதிவே இந்த சமுதாயத்தின் கழிவுகளை கலையத்தொடங்கியது மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி தொடருங்கள் நண்பரே . மீண்டும் வருவேன்
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com
//டீவி கொடுக்கறேன், கேஸ் அடுப்பு கொடுக்கறேன், ரெண்டு ஏக்கர் நிலம் கொடுக்கறேன்னு டபாய்கரதவிட எல்லா வீட்டுக்கும் சுகாதாரமான கழிவறை கட்டித்தரம்னு தேர்தல் வாக்குறுதி கொடுங்க அப்பு....//
குடிநீரும், கழிவு கையாளுதலும் அரசின் அடிப்படை கடமை. ஒய்யாரக் கொண்டையும் தாழம்பூவுமாம் என்று வீட்டுக்கு உள்ளே வண்ணத் தொலைக்காட்சி, வீட்டுக்கு வெளியே மலக்குவியல் என்று புரட்சி நடக்கிறது.
//பொதுக் கழிப்பிடத்துல தண்ணிவசதி இருக்கான்னு, எட்டி பாத்துட்டு ஓன்னுக்கு, ரெண்டுக்கு பிரச்சணை தீத்துட்டு மூனுக்கு (Moon) போயி தண்ணியிருக்கான்னு பாருங்க.//
சென்னையில் சைதாப்பேட்டையிலிருந்து தீவுத் திடல் வரை அண்ணா சாலையில் நடந்து பாருங்கள், எத்தனை குப்பைத் தொட்டிகள், பொதுக் கழிப்பிடங்கள் இருக்கின்றன என்று எண்ணிப் பாருங்கள். ஒரு கை விரல்கள் கூடத் தேவைப்படாது.
//காலரா, டயேரியா, மலேரியா, சிக்குன் குன்யான்னு மனுசன் அனு, அனுவா சாவறதுக்கு பதில் சொல்லிட்டு அனு, ஆயுத ஒப்பந்தத்துல கையெழுத்து போடுங்கடா சாமி......//
அதில் கார்பொரேட் ஆதாயத்துக்கு வழி இல்லையே. மன்மோகன்சிங்கும், சிதம்பரமும் அதற்கு மட்டும்தான் பணி புரிவார்கள். காலரா ஒழிந்தால் GDP வளருமா?
அரசியலும் வியாபாரமும் கூட்டு சேர்ந்து நடத்தும் அவல பொருளாதார உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் வேறு வழிகள்தான் தேட வேண்டும்.
மா சிவகுமார்
நல்ல சிந்தனை, நயமான வரிகள், எளிய நடை.
தொடரட்டும் உங்கள் சமூக அக்கறை.
வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்!
விஸ்வம்
நெம்பர் 1 பதிவு!
சமூக அக்கறைக்கு நன்றி, வாழ்த்துக்கள், பலரின் மனச்சாட்சி உரைக்கும் செவிட்டு வார்த்தைகளுக்கு உணர்வு கொடுத்து எழுதமைக்கு நன்றி, நன்றி, நன்றி, தொடரட்டும் உங்கள் சமூக அக்கரை.
Post a Comment