நானே கேள்வி # நானே பதில் #
நானே கேள்வி #
நானே பதில் # சென்னைத்தமிழன் #
கேள்வி –
நமது அலுவலகத்தில் சத்துணவு திட்டப்பிரிவு உள்ளது. அதில் சத்துணவு
அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என பணி
புரிகிறார்கள். அவர்களுக்கு
விடுப்பு உண்டா?
சிவதி பதில் –
ஆம். ஒரு மாதத்திற்கு ஒரு நாள் வீதம் ஆண்டிற்கு 12 தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு ஒரு நிபந்தனை உண்டு.
ஆனால் விடுப்பை அந்தந்த மாதமே
துய்க்க வேண்டும். அந்த விதிமுறைகள் தற்போது தளர்த்தப்பட்டு (சத்துணவு ஊழியர்கள்
சங்கம் போராடிய பிறகுதான்) ஆணை வெளியிடப்பட்டது.
அதாவது ஒரு மாதம் எடுக்காமல்
விட்ட விடுப்பை அடுத்த மாதம் சேர்த்து எடுத்து கொள்ளலாம். அத் தற்செயல் விடுப்பு
இரண்டு நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். விடுப்பு எடுக்கும் நாளில் உணவு
செய்முறை மற்றும் வழங்களில் யாதொரு குறைபாடுமின்றி மாற்று ஏற்பாடுகள் செய்துவிட்டு
செல்ல வேண்டும்
(அரசு
ஆணை. சத்துணவு திட்டத்துறை நிலை 166 நாள். 30.12.2009)
# சென்னைத்தமிழன்#
0 comments:
Post a Comment