இலக்கியத்தில் காதலுக்கு மரியாதை
காதலை சொல்வதில் சங்க இலக்கியத்திற்கு நிகராக ஏதுமில்லை. நற்றிணையும், குறுந்தொகையும் சங்ககால சூழுலுக்கு சென்று இரசிக்க நல்ல தமிழ் வாத்தியார் அமைவது ஒரு கொடுப்பினை. இப்போது திரைப்பாடல்கள் காதலை பாடாமல் காமத்தை பாடுகிறது. ஆனால் சங்க காலத்தில் அப்படியில்லை. காதல், வீரம், காமம், சூழல், அறம் ஆகியவை உள்ளார்ந்த பொருளோடு நம்மை வியக்க வைக்கின்றன.
நற்றிணையில் ஓர் பாடல். என்னமாய் எழுதியிருக்கிறார் பாருங்கள்......
‘அமர் வரின், அஞ்சேன், பெயர்க்குவென்;
நுமர் வரின், மறைகுவென்-மாஅயோளே!’
நுமர் வரின், மறைகுவென்-மாஅயோளே!’
காதலுனும் காதலியும் அவரவர் வீட்டிற்கு தெரியாமல் காட்டு வழியே இடம் பெயர்கின்றனர். அப்போது ஓர் மறைவிடத்தில் தூரத்தில் சத்தம் கேட்கிறது. அப்போது காதலன் காதலியிடத்தில் கூறுகிறான்...
பகைவர்- எதிரி யாராவது வருவார் எனில் அவர்களை தகர்த்தெரிவேன்.
வருவது உன் உறவினர் எனில் மரத்திடையே ஒளிந்து கொள்வேன்.
நயமான வரிகள் நல்ல காதல்.
இப்போதைய காதல் பகைவர் இடத்தில் அன்பு பாராட்டுவதும்,
உறவினர் இடத்தில் பகைகொள்வதுமாக அமைகிறது.
இலக்கியம் மொழியை மட்டுமல்ல....
மனிதத்தையும் பாராட்டுகிறது.
- சென்னைத்தமிழன்
2 comments:
இலக்கியம் நயம் நிறைந்த மிகவும் சுவாரஸ்யமான பகிர்வு. சங்ககால காதலை இக்கால (காமக்)காதலுடன் ஒப்பிட்ட விதம் அருமை. புதிய டெம்பிளேட்வுடன் தங்களது தளம் மிகவும் அருமையாக உள்ளது.
இலக்கியத்தில் காதல் வரிகள் தமிழுக்கும் தமிழனின் உணர்விற்கும் வித்து. அதனை எடுத்து உரைத்தமைக்கு மிக்க நன்றி. நம் தமிழனை விட ரசனையில் சிறந்தவன் வேறு யாரும் இல்லை. தங்களுடைய தளம் மிகவும் அருமை நண்பரே OK Supper.
Post a Comment