கெடைக்காது ஆனா கெடைக்கும்......

சாக அடிக்கிறவன் பேரு பொதுவா ‘எமன்’னுதான் சொல்லுவோம். ஆனா இப்போ எல்லாம் அதன் பேரு என்னமோ ‘என்டோ சல்பான்’னு சொல்றாங்க.. புது புது புரிந்துணர்வு ஒப்பந்தம் வந்ததுக்கப்புறம் புரியாத பேரோட தெரியாதவங்களை கொல்லற அன்னிய முதலீடுதான் ‘என்டோ சல்பான்’ பூச்சிக்கொல்லி மருந்து.

இது பூச்சிய மட்டும்தான் கொல்லும்னு வாங்கி பயர்களுக்கு அடிச்சாங்க... மத்திய அரசும், மாநில அரசும் சேர்த்து அடிச்சதுல விவசாயிங்கள மட்டுமில்லாம அய்யோ பாவம் அப்பாவி மக்களுக்கும் அரிச்சந்திரன் கோயிலுக்கு அனுப்பிட்டாங்க....

ஆமாங்க.....
கேரளாவில் காசர்கோடு, முழியார், பெல்லூர் பகுதியில 4700 ஏக்கர் நெலத்துல என்டோ சல்பான் பூச்சிக்கொல்லி தெளிச்சி விவசாயம் பன்னதுல ஏராளமான பேர வாய்கரிசி போட்டு எமன்கிட்ட அனுப்பினது நம்ம அரசுதான்.

இந்த பூச்சி மருந்து வேனா... வேனா.... விட்டுடுன்னு வடிவேலு கணக்கா நம்மாலுங்களும் கெஞ்சி கூத்தாடி பார்த்தாங்க.... ஆனா இந்த விவசாய அமைச்சர் சரத் பவார்- பார்த்தீபன் கணக்கா குண்டக்க மண்டக்க பேசி இந்த பூச்சிமருந்து வியாபாரத்த எல்லாம் நிறுத்தமுடியாது அப்புன்னு ஆப்பு வச்சுபுட்டார்.

1999லிருந்து ஹாலந்து, ஜெர்மனியில இருந்து எதிர்ப்பு கெளம்பி சூடு பிடிச்சி போராட்டமெல்லாம் நடந்துகிட்டு வருது. ஆசிய, மேற்காசிய 63 நாடுகள்ல இந்த என்டோ சல்பானுக்கு தடை விதிச்சி நிறுத்திட்டாங்க.... சுற்று சூழல் மாசு படுது... நெலமெல்லாம் விஷமாயிடுதுன்னு தட செய்ய சொல்லி மக்கள் போராடி வர்ராங்க....

ஆனா இந்த தொழிலதிபனுங்க தொல்ல தாங்க முடியாம யார் ஆட்டமும் செல்லுபடியாகாம என்டோ சல்பான் சக்கபோடு போடுது.

இயற்கை ஆர்வலர்களும், முற்போக்கு எண்ணம் கொண்டவங்களும் இதை எதிர்கிறாங்க. என்டோ சல்பானில் உள்ள கரிம குளோரின் சேர்மத்திற்கு பதில் கரிம பாஸ்பரஸ் சேர்ம பூச்சிக்கொள்ளி பயன்படுத்தலாம்னு ஆலோசணையும் சொல்றாங்க.....

கேப்பார் பேச்ச கேட்டா நாடு ஏன் கெடப்போவது. முட்டிகிட்டு அழுது மூலை பிதிங்கனதுதான் மிச்சம்.

தமிழக சத்த மன்றத்துல ச்சீ... சட்ட மன்றத்துல வேளாண் அமைச்சர் ‘இனிமேல தமிழநாட்டுல என்டோ சல்பான் வாங்கி விக்க மாட்டோம்னு சொன்னாரு..... அம்மா விசுவாசிங்க எல்லாம் டோபுல தொம்... தொம்முன்னு தட்டுனாங்க......

ஆனா எல்லா பூச்சி மருந்து கடையிலயும் இன்னமும் ‘என்டோ சல்பான்’ கெடைக்குது.....

டாஸ்மாக்கு குடிக்கிறவனுக்கு மட்டும்தான் சங்கு ஊதும்....
ஆனா
என்டோ சல்பான் குடியானவனுக்கு எல்லாருக்கும் சாவு மணி அடிக்கும்......

நாம இன்னும் சாகாம இருக்கறத்தால இத பாத்துகிட்டு சும்மா இருக்க முடியாதுன்னு சொல்லவந்தேன்.....
வேற வொன்னுமில்ல.... போராடுங்கப்பா.......


2 comments:

த,அமலா said...

என்னங்கள் வேறு படின் எழுத்துக்கள் மட்டும் இன்றி இயக்கையும் வேறு படுகிறது. இயற்கையை தெய்வமாக நினைத்து வாழ்ந்த நம் முன்னோர் ஆரோகியமாக நல்ல முறையில் 100 வயது வரை நன்றாக இருந்தனர். ஆனால் இன்று இயற்கையை மறந்து செயற்கையை நாடுவதால் இயற்கை மட்டும் இன்றி நாமும் அழிந்து வருகிறோம். என்டோ சல்போன் பற்றிய கட்டுரைக்கு நன்றி தோழர். செயற்கையை கைவிடுவோம், இயற்கையை தொழுவோம். நன்றி,

D. Maya. said...

த. மாயா,

என்டோ சல்போன் பற்றிய கட்டுரைக்கு நன்றி தோழர். பல்வேறு முகங்களில் சமூக அக்கரை பற்றிய செய்திகள் எதிர் பார்க்கின்றோம் நன்றி.

Post a Comment

Newer Post Older Post Home
மண்ணை நேசிக்கும் மனிதனின் மனசாட்சி

என்னைப்பற்றி

நான் ஒரு வழிப்போக்கன், உங்களைப்போல எனக்கும் எதன் மீதும் கருத்து உண்டு. அதன் மீது உங்களுக்கும் விமர்சனம் இருக்கக்கூடும். இக்குளத்தில் கல்லெறியுங்கள். இனி இப்புவியில் நூறு பூக்கள் மலரட்டும்.

Followers

நூறு வார்த்தை பதிவு

காலச்சக்கரம் வேகமாய் சுழல்கிறது. நூறு வாரத்தைக்குமேல் படிக்க உங்களுக்கும் நேரமில்லாமல், எழுத எனக்கும் நேரமில்லாமல் - இடையே கிடைக்கும் சொற்ப காலத்தில் மனிதவாழ்வினை பற்றி பேசுவோம்.

Recent Comments