கபடமற்ற கர்நாடகர்கள்.....

 
       தமிழனுக்கு, பயிர் வாழவும் நீர் கிடையாது, உயிர் வாழவும் நீர் கிடையாது என அடாவடித்தனம் செய்யும் கர்நாடகர்களைப் பற்றியதல்ல இப்பதிவு. நீரை கொள்ளையடிப்பவர்களை பற்றிப்பேசி நேரத்தை வீணாக்காமல், மனதை கொள்ளையடிப்பவர்களை பற்றி பேசுவோம்.

           மனிதனாகட்டும் அல்லது மற்ற உயிரினமாகட்டும் இரம்யமான சூழலுக்கு மனதை கொள்ளைகொடுக்காத உயிரினமே இல்லை. அதுபோல்தான் இரம்யமான சூழலுக்காகவே தமிழகத்தின் கோவை மாவட்டம், ஆனைக்கட்டிக்கு படையெடுத்து வருகின்றன கர்நாடக பட்டாம்பூச்சிகள். வண்ண வண்ண கோலங்கள் அள்ளி தெளித்தாற்போல், பறக்கும் ஓவியமாக சுற்றி வருகின்றன.

பொதுவாக வண்ணத்துப்பூச்சிகள் காற்று வரும் திசைக்கு எதிராக பறந்து செல்லும் இயல்பு கொண்டவை. ஜுன், ஜூலையில் நீலகிரி மலைத்தொடர் பகுதியிலும் கர்நாடகப்பகுதியிலும் இருக்கும் இவை தென்மேற்கு திசையிருந்து வடகிழக்காக இடம்பெயர்கிறது. நீலகிரி மலைத்தொடர் பகுதிகளிலிருந்து வெள்ளியங்கிரி மலைப்பகுதிக்கு இன்ப சுற்றுலாவிற்கு கிளம்பிவிடுகின்றன.

இவை தமது வாழ்க்கையை முட்டை, புழு, கூட்டுப்புழு, முழுப்பூச்சிப்பருவம் என நான்கு வகை அவதாரமா எடுக்கின்றன.

        அக்டோபர் நவம்பர் மாத்தில் கோவை மாவட்டம் ஆனைகட்டிக்கு தேன்நிலவிற்காக வருகின்றது. வந்த இடத்தில் ஒரு காமக்களியாட்டமே நடக்கின்றது. பட்டாம் பூச்சிகள் சூரிய உதயத்திற்குப்பின்தான் பறக்க முற்படுகின்றன. அதற்கு முன்னதாக மரத்தின் மேலமர்ந்து சூரிய வெளிச்சத்தில் தன் சிறகுகளை உலர்த்தி சிறகடிக்க பக்குவப்படுத்திக்கொள்கின்றன. பெண் பூச்சிக்கு தேவையான சத்துள்ள தாவர உணவை ஆண்பூச்சி தேர்வு செய்து வழங்கி தமது இணையை வசியப்படுத்துகிறது. பெண் பூச்சியும் தமது தேவையறிந்து சேவகம் செய்யும் ஆணின் ஆசைக்கு உடன்படுகிறது. வந்த வேலையை சிந்தாமல் சிதறாமல் பக்குவமாய் முடிக்கின்றன. பெரும்பாலான ஆண் வண்ணத்துப்பூச்சிகள் புணர்ச்சிக்கு பின்பாக இறந்துவிடுகின்றன.

இவைகள் ஆனைகட்டியை பகுதியை ஏன் தேர்வு செய்கின்றது தெரியுமா?
ஊடல் கொள்ளத்தகுந்த புவியியல் தட்பவெப்பம்,
செரிவு மிகுந்த உணவு,
சூழலில் நிலவும் ஈரப்பதம்,
காற்றின் திசை இவையெல்லாம் அவற்றை தமிழகத்திற்குள் அழைத்துவரச்செய்கின்றன. கூட்டம் கூட்டமாக வகை, வகையாக லடசக்கணக்கில் சுற்றி மகிழ்கின்றன.

இவற்றில் முக்கிய வகைகளான admirals, fritillaries, Monarch, Zebra, painted ladies மற்றும் Sulphur குறிப்பிடும் படியானவையாகும். இதில் மொனார்ச் வகைவகையைச்சார்ந்தவை 4,000 கீ.மி. முதல் 4,800 கி.மீ வரை பறந்து செல்லும் திறன் பெற்றவை.


''ச்சீ என்னய்யா வாழக்கை  இது. பொழப்பு பாடாய் படுத்துதே,  
எதிர்நீச்சல் போடுறதே வாழ்க்கையா போயிடிச்சே.....

மனிதனாக பிறந்ததற்கு பறவையாகவோ, அல்லது பட்டாம்பூச்சியாக பிறந்திருக்க கூடாதா என அலுத்துக்கொள்ளும் மனிதர்களுக்கு ...

பூந்தோட்டமே தமது வாழ்க்கை எனச்சொல்லும் வண்ணத்துப்பூச்சி கூட 
காற்றின் திசைக்கு எதிராகப்பறக்கிறது. 
எதிர்நீச்சல் போட்டு போராட்ட உணர்வோடு வாழ்க்கை வாழ்பவனுக்குத்தான் இந்த பூந்தோட்ட வாழ்க்கை சொந்தம் எனும் உண்மையை மானுட குலத்திற்கு அவை விடுக்கும் செய்தியாக எடுத்துக்கொள்வோம்.

ஒவ்வோர் வண்ணத்துப்பூச்சியும் தமக்குள் பாடுவது எனக்கு நன்றாகவே கேட்கிறது.

' உலகம் பிறந்து எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக... '

- சென்னைத்தமிழன்

posted under |

4 comments:

Bruno said...

மிகவும் ரசித்து படித்தேன்

நன்றி :)

த,அமலா said...

அன்பு தோழர்க்கு தோழியின் ஒரு சிறு கதை, Sorry pa காதல கதையும் கூட, இரண்டு வண்ணத்து பூச்சிகள் ஒரு பூவில் அமுதத்தை உண்டன. அப்போது ஒரு ஆண் வண்ணத்து பூச்சி தான் உண்ட உணவை பெண் வண்ணத்து பூச்சிக்கு ஊட்டியது, அப்போது விளையாட்டு தனமாக கேட்ட பெண் வண்ணத்து பூச்சி என் மேல் அதிக அன்பா என்று அதறகு அந்த வண்ணத்து பூச்சி ஆம் என்றது. உடன் பெண் வண்ணத்து பூச்சி ஒரு சிறு விளையாட்டு என்றது ஆண் வண்ணத்து பூச்சி ஒப்புக்கொண்டது. காலையில் விடியும் முன்பு இந்த அமுதுண்ட பூவை யார் அடைகின்மோ அவர்கள் காதல் சிறந்தது என்றது.
மறு நாள் காலை பெண் வண்ணத்து பூச்சி வந்தது. ஆனால் ஆண் வண்ணத்து பூச்சி வரவில்லை துடித்த வண்ணத்து பூச்சி பூ வை சுற்றி வந்தது அப்போது தான் அதற்கு தெரிந்தது ஆண் வண்ணத்து பூச்சியின் அருமையான காதல். இரவு உறங்காமல் காத்திருந்து இறந்த ஆண் வண்ணத்து பூச்சி உடன் இறந்தது பெண் வண்ணத்து பூச்சி. அருமையாக உணவு தந்த தோழர்க்கு நன்றி.

சென்னைத்தமிழன் said...

தோழர் புருனோ மதிப்புரைக்கு நன்றி!

தோழர் அமலா வருகைக்கும், கதைக்கும் நன்றி!

வாழ்கை மிக சுவாரசியமாக மாற இருவழிகள்....
ஒன்று......
காதலிப்பவராக இருக்க வேண்டும் அல்லது காதலிக்கப்படுபவராக இருக்க வேண்டும்.
பெண்ணின் கண்கள் ஆணையும்,
ஆணின் கண்கள் பெண்ணையும் செதுக்குகின்றன.
பக்தி, மொழி, கடவுள், மதம் எல்லாம் நம்மிடையே திணிக்கப்பட்டவை. செயற்கையானதும் கூட...

காதல் அப்படியல்ல அது
இயற்கையான உணர்வு.....

காதலிக்க தொடங்கும்போது மட்டுமே மனிதன் நிறைவடைகிறான்..... இது உளவியல் அறிஞர்களின் வாக்குமூலம்....

''ஆதலினால் காதல் செய்வீர்'' என்றான் பாரதி...

வாழ்க்கை பாடம் சொல்லும் பட்டாம்பூச்சி வாழியவே!

- சென்னைத்தமிழன்

Anonymous said...

Chennai tamizha kadhalai patriya umadhu vilakkam arumai...

Karan

Post a Comment

Newer Post Older Post Home
மண்ணை நேசிக்கும் மனிதனின் மனசாட்சி

என்னைப்பற்றி

நான் ஒரு வழிப்போக்கன், உங்களைப்போல எனக்கும் எதன் மீதும் கருத்து உண்டு. அதன் மீது உங்களுக்கும் விமர்சனம் இருக்கக்கூடும். இக்குளத்தில் கல்லெறியுங்கள். இனி இப்புவியில் நூறு பூக்கள் மலரட்டும்.

Followers

நூறு வார்த்தை பதிவு

காலச்சக்கரம் வேகமாய் சுழல்கிறது. நூறு வாரத்தைக்குமேல் படிக்க உங்களுக்கும் நேரமில்லாமல், எழுத எனக்கும் நேரமில்லாமல் - இடையே கிடைக்கும் சொற்ப காலத்தில் மனிதவாழ்வினை பற்றி பேசுவோம்.

Recent Comments